Enable Javscript for better performance
கிரிவலப் பாதையில் 2 ஆயிரம் மரங்கள் நடப்படும்: மாவட்ட ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    கிரிவலப் பாதையில் 2 ஆயிரம் மரங்கள் நடப்படும்: மாவட்ட ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 18th May 2018 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் விரைவில் 2 ஆயிரம் மரங்கள் நடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கூறினார்.
    திருவண்ணாமலையில் உள்ள கிரிவலப் பாதை ரூ.65 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த இடங்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு 
    செய்தார்.
    திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயிலில் இருந்து கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் இரு சக்கர வாகனங்களில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    பின்னர், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    கிரிவலப் பாதையில் வனத் துறை, வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 62 மரங்கள் வாடியுள்ளது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை மூலம் கிரிவலப் பாதையில் 2 ஆயிரம் மரங்கள் நடுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் 10 நாள்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கும். கிரிவலப் பாதை விரிவாக்கப் பணி 3 மாதங்களில் நிறைவு பெறும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai