Enable Javscript for better performance
சொரத்தூரில் மனுநீதி நாள் முகாம்: 63 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சொரத்தூரில் மனுநீதி நாள் முகாம்: 63 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

    By DIN  |   Published on : 18th May 2018 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேட்டவலத்தை அடுத்த சொரத்தூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 63 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    முகாமுக்கு கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் பரிமளா, வட்ட வழங்கல் அலுவலர் ஜான்பாஷா, வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி, கீழ்பென்னாத்தூர் வட்ட தலைமை நில அளவர் சையத் ஜலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    வருவாய் ஆய்வாளர் பர்வீன்பானு வரவேற்றார். முகாமையொட்டி, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, உள்பிரிவு பட்டா மாறுதல், நத்தம் பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 106 மனுக்கள் பெறப்பட்டன.
    சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 63 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
    முகாமில், நில அளவர் பிரசன்னகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் உதயகுமார், அய்யாக்கண்ணு, சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகரன், தசரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai