டெங்கு கொசுப் புழு உற்பத்தி தடுப்புப் பணிகள் ஆய்வு

செங்கம் அருகே புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் டெங்கு கொசுப் புழு உற்பத்தி தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

செங்கம் அருகே புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் டெங்கு கொசுப் புழு உற்பத்தி தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, புதுப்பாளையம் பகுதியில் உள்ள சிறு மின்விசை மோட்டாருடன்கூடிய குடிநீர்த் தொட்டிகள், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் கால்வாய்கள் ஆகிய பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளனவா, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என அவர் ஆய்வு செய்தார்.
மேலும், பொதுமக்களிடம் குடிநீர்த் தொட்டி, குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி மழை நீர் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் மட்டை, டயர், தேநீர் குவளை ஆகியற்றில் மழை நீர் தேங்கினால், அவற்றின் மூலம் டெங்குக் கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தினார்.
உடன், புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி, செங்கம் வட்டாட்சியர் சங்கரன், காரப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுபத்தரா, புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுரேஷ், மண்டல துணை வட்டாட்சியர் முனுசாமி உள்பட வருவாய்த் துறை அதிகாரிகள், புதுப்பாளையம் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com