வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: 860 ஊராட்சிகளில் இன்று கிராம சபைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (அக்டோபர் 13) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும், ஞாயிற்றுக்கிழமை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (அக்டோபர் 13) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 14) வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான சிறப்பு முகாம்களும் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை  மாவட்டத்தில் 2019 ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியல் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 
இதுதொடர்பாக கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்தக் கூட்டங்களில் வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாம்களில் 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கத் தேவையான வயது ஆதாரம், இருப்பிட ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். 
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள தேவையான படிவங்களையும் முகாம்களில் வழங்கலாம்.
வரும் 31-ஆம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலும், அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க
லாம்.
இதுதவிர, ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய்/ என்ற இணையதளத்திலும் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com