டெங்கு தடுப்புப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சியில் நடைபெறும் டெங்கு தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நகராட்சியில் நடைபெறும் டெங்கு தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகராட்சி, லட்சுமிபுரம் பகுதியில் ஆய்வு செய்த ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, அங்கு பயன்பாட்டில் இல்லாத குடிநீர்த் தொட்டியை அகற்றவும், அந்தப் பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். 
தொடர்ந்து, சில வீடுகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பல இடங்களில் கொசுப்புழு உற்பத்தியாவதைக் கண்டறிந்து, உடனே அகற்ற உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்படும் தருமலிங்கம் பூங்காவை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் வைத்துள்ள பாத்திரங்களை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத்குமார், வருவாய் ஆய்வாளர் எம்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com