ரூ.11.32 கோடியில் தண்டரை - எரையூர் இடையே மேம்பாலம்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

செய்யாறு ஆற்றின் குறுக்கே ரூ.11.32 கோடியில் தண்டரை -  எரையூர் கிராமங்களுக்கு இடையே மேம்பாலம்

செய்யாறு ஆற்றின் குறுக்கே ரூ.11.32 கோடியில் தண்டரை -  எரையூர் கிராமங்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
செய்யாறு தொகுதியில் செய்யாறு ஆற்றின் குறுக்கே தண்டரையில் இருந்து எரையூர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் ரூ.11.32 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. 
அதன்படி, மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில்,  அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
தண்டரை கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி 
கே.மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு யாகத்துடன் நடைபெற்ற பூமி பூஜையின்போது, செங்கற்களை வைத்து மேம்பாலத் திட்டத்துக்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் டி.பி.துரை, எஸ்.கிருஷ்ணன், எம்.மகேந்திரன், 
பி.ரமேஷ், கே.ஆர்.தசரதன், அரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய பேருந்துகள் இயக்கம்: தொடர்ந்து, செய்யாறிலிருந்து சென்னைக்கு தடம் எண்.130 வழித்தடத்தில் 3 புதிய பேருந்துகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
செய்யாறு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆரணி தொகுதி எம்.பி. செஞ்சி சேவல் வி.ஏழுமலை, திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் ஜெ.சுந்தரம், மண்டல துணை மேலாளர் (வணிகம்) செல்வகுமார், மேலாளர் ஆர்.விநாயகம், அதிமுக நகரச் செயலர் ஏ.ஜனார்த்தனம், எஸ்.ரவிச்சந்திரன், தொழில் சங்க மண்டல துணைச் செயலர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com