வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: 860 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
2019 ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கூட்டங்களில் வாக்காளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அலுவலர்கள் விளக்கினர்.
இன்று சிறப்பு முகாம்கள்: இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 14) மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. முகாம்களில் 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கத் தேவையான வயது ஆதாரம், இருப்பிட ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ளத் தேவையான படிவங்களையும் முகாம்களில் வழங்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com