சுடச்சுட

  

  கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி

  By DIN  |   Published on : 01st September 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செய்யாறை அடுத்த கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மகா சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். இந்த மகா சங்கடஹர சதுர்த்தியில் மற்ற மாதங்களில் வரும் அனைத்து சங்கடஹர சதுர்த்திகளில் வழிபடும் பலனைப் பெறலாம் என்பது ஐதீகம்.
  இத்தகைய சிறப்பு பெற்ற மகா சங்கடஹர சதுர்த்தி விழா காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள கூழமந்தல் கிராம ஏரிக்கரைப் பகுதியில் 27 நட்சத்திர அதிதேவதைகள், சனி, ராகு, கேது பகவான்கள்,  இந்த தெய்வங்களுக்கு நடு நாயகனாக அமர்ந்து அருள்பாளிக்கும் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  முன்னதாக, 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும், ராகு, கேது, சனி பகவான்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நட்சத்திர விருட்ச விநாயகருக்கு 8 வகையான அபிஷேக நறுமணப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றவி. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai