கோயில்களில் குடமுழுக்கு

கலசப்பாக்கத்தை அடுத்த சிங்காரவாடி ஊராட்சியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர், செல்வ விநாயகர், காளியம்மன், அம்சாரம்மன்

கலசப்பாக்கத்தை அடுத்த சிங்காரவாடி ஊராட்சியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர், செல்வ விநாயகர், காளியம்மன், அம்சாரம்மன் கோயில்களிலும், அருணகிரிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை  நடைபெற்றது.
கலசப்பாக்கத்தை அடுத்த சிங்காரவாடி ஊராட்சியில் மிகவும் பழைமை வாய்ந்த வரசித்தி விநாயகர், செல்வ விநாயகர், காளியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களின் கோபுரங்கள் சிதிலமடைந்தால், அவற்றைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அந்தப் பணிகள் நிறைவடைந்து வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. 
இதையொட்டி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 
அதேபோல, அருணகிரிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com