கரிப்பூர் கருமாரி அம்மன் கோயிலில் திருட்டு

சேத்துப்பட்டை அடுத்த கரிப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள கருமாரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை ரூ. ஒரு லட்சம், 2 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேத்துப்பட்டை அடுத்த கரிப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள கருமாரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை ரூ. ஒரு லட்சம், 2 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரிப்பூர் கிராமத்தில் பழைமைவாய்ந்த கருமாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்று முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குச் சென்று வழிபட்டதுடன், உண்டியலில் காணிக்கையாக பணம், நகைகளை செலுத்தி வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை ரூ. ஒரு லட்சம், 2 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து கரிப்பூர் கிராம மக்கள் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், சம்பவ இடத்துக்குச் சென்று விரல் ரேகைகளையும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com