தீபாவளி பட்டாசுக் கடை வைக்க விரும்புவோர் செப்டம்பர் 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பட்டாசுக் கடை வைக்க விரும்புவோர் வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பட்டாசுக் கடை வைக்க விரும்புவோர் வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
நாடு முழுவதும் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையின்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசுக் கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் வரும் 28-ஆம் தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய விண்ணப்பத்தை 5 நகல்களில் பூர்த்தி செய்து ரூ.2-க்கான நீதிமன்ற கட்டணவில்லை ஒட்டி, உரிமக் கட்டணமாக ரூ.500-ஐ அரசுக் கருவூலத்தில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் கடையின் வரைபடம், மனுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 2, நிகழ் நிதியாண்டின் வீட்டு வரி ரசீது, வாடகைக் கடை எனில் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம், சொந்தக் கட்டடம் எனில் அதற்கான உரிய ஆவணம், வீட்டு வரி ரசீதின் நகல் ஆகிவற்றை இணைக்க வேண்டும்.
உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர் பட்டாசுக் கடை நடத்தும் இடத்தை பொதுமக்களுக்கு எவ்வித சிரமும் இல்லாமலும், பாதுகாப்பான இடமாகவும் தேர்வு செய்ய வேண்டும். அத்தகைய ஆட்சேபனை இல்லாத இடத்துக்கு மட்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு உரிமம் பெற்றவர்கள் அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் அளித்தால், ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்
என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com