ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கல்லூரியில் 175 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 175 பேருக்கு பணி நியமன ஆணைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :23 ஜனவரி 2019, 9:52 am IST

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 175 பேருக்கு பணி நியமன ஆணைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் அண்மையில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 175 மாணவ, மாணவிகள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். கல்லூரிப் பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 
விழாவில், கல்லூரி கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன், கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ், துணை முதல்வர் கே.அண்ணாமலை, கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலரும், உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவருமான எம்.கோபு மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.