சுடச்சுட

    

    ஆரணி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளரும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான  ஜி.செந்தமிழனுக்கு முதலியார் முன்னேற்றச் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
    அந்தச் சங்கத்தின் தலைவர் எஸ்.தியாகராஜன், அமமுக வேட்பாளர் ஜி.செந்தமிழனை திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
    ஆரணியைச் சேர்ந்த அமமுக வேட்பாளர் ஜி.செந்தமிழன், இந்தப் பகுதியைச் சேர்ந்த நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறியதாலும், முதலியார்கள் சமூகத்துக்கு உரிய மரியாதை வழங்கியதாலும் எங்களது ஆதரவைத் தெரிவித்தோம் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai