சுடச்சுட

  

  கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: முதன்மைக் கல்வி அலுவலர்

  By DIN  |   Published on : 16th April 2019 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரித்தார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரு சில தனியார் பள்ளிகள் விடு
  முறையில் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக புகார்கள் வரப் பெற்றன.  அரசின் உத்தரவுப்படி,  மாணவ -  மாணவிகளுக்கு கோடை விடுமுறை  விடப்பட வேண்டும். விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் மாணவ - மாணவிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவர். 
  எனவே, தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில் கண்டிப்பாக சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது. மீறி சிறப்பு வகுப்புகள் நடத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தெரிய வந்தால் 87542 52452 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai