சுடச்சுட

  

  திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக முன்னாள் எம்.பி. 
  த.வேணுகோபால் உள்ளிட்ட திமுகவினர் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
  திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம், அத்தியந்தல், ஆணாய்ப்பிறந்தான், பண்டிதப்பட்டு, கண்னந்தம்பூண்டி, நல்லவன்பாளையம், கீழ்செட்டிப்பட்டு, மெய்யூர், வரகூர், வானாபுரம், நரியாப்பட்டு, தலையாம்பள்ளம், பழையனூர், கண்டியாங்குப்பம், வேளையாம்பாக்கம், கல்லொட்டு, நவம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, தச்சம்பட்டு, சின்னகல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, காட்டாம்பூண்டி, சு.பாப்பம்பாடி, பவித்திரம், அரடாப்பட்டு, கொளக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
  பிரசாரத்தின் போது, ஒன்றிய திமுக செயலர்கள் த.ரமணன், சி.மாரிமுத்து, மாநில தொமுச செயலர் க.சவுந்தரராஜன், மாவட்ட திமுக அமைப்பாளர்கள் பொன்.முத்து உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai