சுடச்சுட

  

  செய்யாறு அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு ஞாயிற்றுக்கிழமை இரவு தீயில் எரிந்து சேதமடைந்தது.
  செய்யாறு வட்டம், அனப்பத்தூர் கிராமம் மேட்டுத் தெருவில் வசிப்பவர் கன்னியப்பன் (57). தொழிலாளி. இவரது மனைவி மலர். இவர்கள், கடந்த 3 மாதங்களாக அரசின் பசுமை வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனராம். இதனால், கட்டப்படும் வீட்டின் அருகே குடிசை வீடு அமைந்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனராம்.
  இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
  தகவலறிந்த செய்யாறு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்த தீ மேலும் பரவாமல் அணைத்தனர். 
  இந்தத் தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமடைந்தது. அந்த வீட்டில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகை, வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பாலனது. தீ விபத்து குறித்து அனக்காவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai