சுடச்சுட

  


  ஆரணி கைலாயநாதர் கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
  ஆரணி கைலாயநாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினந்தோறும் காலையும், மாலையும் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, அன்னம், யானை, நாகம், நந்தி, ராவணேஸ்வர வாகனங்களில் வீதியுலா வந்தது. 
  விழாவில், கைலாயநாதர் - அறம்வளர்நாயகிக்கும், முருகர் - வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
  இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  தேரில் உத்ஸவர் அறம்வளர்நாயகி சமேத கைலாயநாதர் எழுந்தருளியதை அடுத்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 
  கோட்டை வீதி, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாட வீதி, பெரியகடை வீதி, மண்டி வீதி, சந்தை சாலை வழியாகச் சென்ற தேர், மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai