சுடச்சுட

  


  தமிழ்நாடு காந்தி பேரவையின் மாதாந்திர சிறப்புக் கூட்டமும், சிறப்புப் பட்டிமன்றமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
  திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கலா விஜயக்குமார் தலைமை வகித்தார். கவிஞர் உமாதேவி பலராமன் முன்னிலை வகித்தார். ப.கதிரவன் இறைவணக்கம் பாடினார். சிறுமி ஸ்வேதாவின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
  தொடர்ந்து, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது தேசிய தமிழ் உணர்வா?, சமுதாய உணர்வா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்துக்கு எழுத்தாளர் ந.சண்முகம் தலைமை வகித்தார்.
  தமிழ் உணர்வே என்ற தலைப்பில் பேராசிரியர்கள் எஸ்.எஸ்.இஸ்மாயில், ஆ.பாக்கியலட்சுமி ஆகியோரும், சமுதாய உணர்வே என்ற தலைப்பில் பேராசிரியர் அ.ஏழுமலை, ஆசிரியர் எஸ்.தேவிகாராணி ஆகியோரும் வாதிட்டனர். இறுதியாக, பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது சமுதாய உணர்வே என்று எழுத்தாளர் ந.சண்முகம் தீர்ப்பு வழங்கினார். 
  நிகழ்ச்சியில், ஓவியர் சோ.ஏ.நாகராஜன், அ.வாசுதேவன், கவிஞர் லதா பிரபுலிங்கம், வி.கே.அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai