சுடச்சுட

  

  ஆரணி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத், தனது தேர்தல் பிரசாரத்தை வந்தவாசி நகரில் செவ்வாய்க்கிழமை மாலை நிறைவு செய்தார்.
  திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகே உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து திறந்த ஜீப்பில் ஊர்வலமாக புறப்பட்ட எம்.கே.விஷ்ணுபிரசாத், தேரடி, காந்தி சாலை, கோட்டை மூலை, குளத்துமேடு, சந்நிதி தெரு, பஜார் வீதி வழியாக வந்தவாசி பழைய பேருந்து நிலையம் வரை சென்று வாக்கு சேகரித்தார்.
  அப்போது, வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர் மற்றும் கூட்டணிக் கட்சி உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai