தூர்வாரப்படாத கால்வாயினால் சுகாதாரச் சீர்கேடு
By DIN | Published On : 21st April 2019 12:46 AM | Last Updated : 21st April 2019 12:46 AM | அ+அ அ- |

போளூர் பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 250-க்கு மேற்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் உள்ளன. இந்தக் கால்வாய்களில் பொதுமக்களால் விடப்படும் கழிவுநீர் மற்றும் மழையின்போது அடித்து வரப்படும் கழிவுகள் சேறும் சகதியுமான செல்கின்றன.
இந்தக் கழிவுநீர் வாய்க்காலில் பொதுமக்கள் குப்பைக் கூழங்களை போடுவதால், கால்வாய் ஆங்காங்கே அடைத்துக் கொண்டு துர்நாற்றம் வீசுகிறது.
கழிவுநீர் வெளியேற முடியாமல் கால்வாயிலேயே தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.இது தொற்று நோய் பரவ வழிவகுக்கும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக பேரூராட்சியில் உள்ள 250 கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வித்துள்ளனர்.