ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 21st April 2019 12:45 AM | Last Updated : 21st April 2019 12:45 AM | அ+அ அ- |

பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.
இந்தப் பள்ளி மாணவ-மாணவிகள் 563 பேர் அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 560 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் பள்ளி 99.46 சதவீத தேர்ச்சியைப் பெற்றது. 500-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை 13 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 2 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளித் தாளாளர் வி.பவன்குமார், செயலர் டி.எஸ்.ராஜ்குமார், பொருளாளர் டி.வசந்த்குமார், ஆங்கில வழிச் செயலர் டி.ஸ்ரீஹன்ஸ்குமார், தமிழ்வழிச் செயலர் வி.சுரேந்திரகுமார் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள், பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.