பள்ளி மாணவர்கள் கணினி, தட்டச்சு பயிற்சி பெற அறிவுறுத்தல்

கோடை விடுமுறையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கணினி, தட்டச்சுப் பயிற்சி பெற வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்


கோடை விடுமுறையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கணினி, தட்டச்சுப் பயிற்சி பெற வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதியுடன் கூடிய கணினிகள் உள்ளன. பல பள்ளிகளில் திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறைகளும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்த ஏதுவாகவும், 2019 - 20ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை இணையதள தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாலும் அனைத்து மாணவ, மாணவிகளும் கோடை விடுமுறையில் அடிப்படை கணினி, தட்டச்சுப் பயிற்சிகளுக்குச் செல்ல வேண்டும்.
இதேபோல, ஆசிரியர்களும் கோடை விடுமுறையில் அடிப்படை கணினி பயிற்சியைப் பெற்றுக்கொள்வது நல்லது. போட்டித் தேர்வுகள் இணையதளம் மூலம் நடப்பதால் மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை கணினி பயிற்சி தேவை என்பதை பெற்றோரும் உணர வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com