முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி விழா
By DIN | Published On : 04th August 2019 12:43 AM | Last Updated : 04th August 2019 12:43 AM | அ+அ அ- |

ஆரணிநகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக, பக்தர்கள் வேண்டுதலின் பேரில் எலுமிச்சை பழங்களை உடம்பில் குத்திக்கொண்டு கட்டை கட்டி ஆடினர். மேலும், ஊர்வலமாக ஆரணி பெரியகடை வீதி, வ.வு.சி வீதி, காந்தி சாலை வழியாக கோயிலை சென்றடைந்தனர். பின்னர்,
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.
மேலும், சனிக்கிழமை உறியடி
திருவிழா, நாடகம் ஆகியவை
நடைபெற்றது.