முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
வினாடி-வினா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
By DIN | Published On : 04th August 2019 12:45 AM | Last Updated : 04th August 2019 12:45 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு வினாடி-வினா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சென்னை மத்திய பெட்ரோலிய சிக்கன ஆராய்ச்சி சங்கம் சார்பில், எரிபொருள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.
குடிமக்கள் நுகர்வோர் சங்க திட்ட அலுவலரும், கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவருமான தனிஷ்லால் வரவேற்றார்.
மத்திய பெட்ரோலிய சிக்கன ஆராய்ச்சி சங்கத்தின் கௌரவ விரிவுரையாளரும், வழக்குரைஞருமான தனஞ்செயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு எரிபொருள் சேமிப்பின் அவசியம் குறித்தும், எரிபொருளை எவ்வாறெல்லாம் சேமிக்கலாம் என்பது பற்றியும் விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, எரிபொருள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம், பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வேதியியல் துறைத் தலைவர் அருண், மருத்துவர் விஜய் மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்கள், கல்லூரி
மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.