கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி தொடக்கம்

திருவண்ணாமலை டெரிடெஸ் குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கு கைவினைப் பொருள்கள் தயாரிக்கும்

திருவண்ணாமலை டெரிடெஸ் குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கு கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் 3 மாத இலவசப் பயிற்சி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம், மகளிர் வாசகர் வட்டம், மலர்களின் சங்கமம், திருவண்ணாமலை பர்ல்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து இந்தப் பயிற்சியை அளிக்கிறது. தொடக்க விழாவுக்கு, பர்ல்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் சாந்தி ராஜன்பாபு தலைமை வகித்தார். 
மாவட்ட ரோட்டரி தொழில்முறைத் தலைவர் பி.கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சியை தொடக்கிவைத்தார்.
ரோட்டரி சங்க நிர்வாகி மஞ்சு, மாணவிகள் கைத்தொழில் கற்பதன் அவசியம் குறித்துப் பேசினார்.  
 நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கச் செயலர் ஆர்.வனிதா, பொருளாளர் பி.திலகவதி, டெரிடெஸ் குழந்தைகள் காப்பக நிறுவனர் செழியன், ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா, அவந்தி இன்போடெக் ஆர்த்தி, மகளிர் வாசகர் வட்டத் தலைவர் விஜயபானு, நூலகர்கள் ஹேமா, சாயிராம், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com