திருவண்ணாமலையில் நாளை நூல் வெளியீட்டு விழா

திருவண்ணாமலையில் தமிழியக்கம் சார்பில் "சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப் பெயர்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெறுகிறது.

திருவண்ணாமலையில் தமிழியக்கம் சார்பில் "சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப் பெயர்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெறுகிறது.
வேலூர் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் நிறுவிய தமிழியக்கம் சார்பில், 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய நூல் அண்மையில் தயாரிக்கப்பட்டது. தமிழ்க் குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட இந்த நூல், கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற 10-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) இந்த நூலின் வெளியீட்டு விழாவும், நூலாக்கக் குழுவினருக்குப் பாராட்டு விழாவும் நடைபெறுகின்றன. திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
விழாவுக்கு தமிழியக்க நிறுவனர் தலைவர் கோ.விசுவநாதன் தலைமை வகிக்கிறார். புதுவை முதல்வர் வே.நாராயணசாமி நூலின் முதல் பிரதியை வெளியிட, மதிமுக பொதுச் செயலர் வைகோ பெற்றுக்கொள்கிறார். பேராசிரியரும், தமிழியக்கத்தின் பொதுச் செயலருமான அப்துல்காதர், கீழ்பென்னாத்தூர் எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com