சுடச்சுட

  

  செய்யாறு அருகே ரூ.3.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்த அதே நேரத்தில், தூசி கே.மோகன் எம்எல்ஏ பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மக்களின் பயன்பாட்டுக்காக பாலத்தை திறந்து வைத்தார். 
  செய்யாறு-வந்தவாசி சாலையில் அனக்காவூர் ஏரியின் குறுக்கே சுமார் ரூ.3.37 கோடிசெலவில் நபார்டு கடன் உதவித் திட்டத்தில் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்த புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 
  அதே நேரத்தில், அனக்காவூரில் மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு எம்.எல். ஏ. தூசி கே.மோகன் மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். 
  அப்போது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 
  நிகழ்ச்சியில் வேலூர் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பி.எம்.ராஜகணபதி, உதவிப் பொறியாளர் எஸ்.கார்த்திக், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் எம்.மகேந்திரன், டி.பி.துரை, ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ குணசீலன், அதிமுக பிரமுகர்கள் பாஸ்கர், வெங்கடேசன், ஜனார்த்தனன், சி.துரை, சேகர், தாமரைக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai