சுடச்சுட

  

  வந்தவாசியை அடுத்த தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜல் சக்தி அபியான் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்துக்கு தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் ப.பரணிதரன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். 
    இதில், ஊராட்சிகளில் தனியார் மற்றும் அரசுக் கட்டடங்களில் எத்தனை மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊராட்சிதோறும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பலகைகள் அமைத்தல், மரங்களின் அருகில் மழைநீர் உறிஞ்சு 
  குழிகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஊராட்சி செயலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பணிகளை விரைவாக மேற்கொள்ளும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai