சுடச்சுட

  

  செங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேயாறு சீரமைப்பு சங்கம் சார்பில், நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ராணி வரவேற்றார். வழக்குரைஞர் செல்வம், அரசுப் பள்ளி ஆசிரியர் கவிஞர் முரளி ஆகியோர் மாணவர்களிடையே நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினர்.
  தொடர்ந்து, சேயாறு சீரமைப்பு சங்கம் சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி, மரக்கன்றுகள் நடும் பணி ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியில் சங்க ஒருங்கிணைப்பாளர் இந்தியன்கமல், பாக்கியராஜ், சிவக்குமார், வசந்த், சிலம்பரசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai