சுடச்சுட

    

    நீர்நிலை பாதுகாப்பு:  கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

    By DIN  |   Published on : 15th August 2019 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சி மூலம் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
    செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட அந்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜல்சக்தி அபியான் திட்ட மூலம்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை தலைமையில் பீம் வெற்றிக் குழு மாணிக்கம் கலைக் குழுவினர்களின் கலை நிகழ்ச்சியுடன், நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு இசை, கிராமிய பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
    செங்கம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் நீர்நிலைகள் குறித்த தலைப்பில் பேசினர். 
    தலைமை ஆசிரியர் பாரதி, ஆசிரியர்கள் சுந்தரவானம், வின்சென்ட், சத்தியகுமார் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai