சுடச்சுட

  

  செங்கம், ஜவ்வாது மலை வட்டங்களில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்களில் 122 பேருக்கு  அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
  செங்கத்தை அடுத்த இறையூர் கிராமத்தில் இறையூர், தொரப்பாடி, நரசிங்கநல்லூர் கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. 
  முகாமில், இறையூர் கிராம நிர்வாக அலுவலர் குணாநிதி வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சங்கரன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  வட்டாட்சியர் பார்த்தசாரதி கலந்துகொண்டு 107 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளான முதியோர் உதவித்தொகை,  கணவரால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல் நகல், உள்பிரிவு உள்ளிட்ட 107 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.
  அதைத்தொடர்ந்து, அரசுத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து துறை வாரியாக அதிகாரிகள், பொதுமக்களிடம் விளக்கிப் பேசினர். 
  கூட்டத்தில், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
  ஜவ்வாது மலை வட்டத்தில்...  
  ஜவ்வாது மலை வட்டம், செண்பகத்தோப்பு கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் ஆரணி கோட்டாட்சியர் மைதிலி தலைமை வகித்தார். 
  வட்டாட்சியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ஜெயராமன் வரவேற்றார். சிறப்பு  அழைப்பாளராக  வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ 
  கலந்துகொண்டு பேசுகையில்,  மலைவாழ் மக்களுக்கு சிப்காட் தொழில்பேட்டை அமைத்துத் தரப்படும், ஜவ்வாது மலை மக்களுக்கென தனி நீதிமன்றம் அமைத்துத் தரப்படும். 
  மலையில்  விளையும் சாமை, மிளகு, தேன்  என  மலைவாழ் மக்களுக்கு கிடைக்கும் பொருள்களை மதிப்பூட்டும்  வகையில்,  தொழில் பயிற்சி அளித்து வாழ்வாதாரத்தை  உயர்த்த வழிவகை செய்யப்படும். 
  ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள கானமலை, நம்பியம்பட்டு, ஜமுனாமரத்தூர் என 5 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களை, மக்கள் தரிசனம்  எனும் பெயரில் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து தீர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.
  இதைத் தொடர்ந்து,  15 பேருக்கு  ஜாதிச் சான்று, பட்டா உள்பிரிவு சான்று வழங்கினார். 
  கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai