சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு நிகழ்ச்சி ஆக. 16-ஆம் தேதி முதல் செப். 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார். 
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: யர்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் என்ற மொபைல் செயலி,   N​V​SP ‌p‌o‌r‌t​a‌l (‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n) என்ற இணையதளம், பொது சேவை மையம், வாக்காளர் சேவை மையம் ஆகியவை வாயிலாக வாக்காளர்கள் தங்களது புகைப்படம், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை தாங்களே சரிபார்த்து தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம். 
  மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 1950 என்ற தொலைபேசி எண் வாயிலாக தங்கள் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். 
  மேலும், வாக்காளர்கள் தங்களது விவரங்கள் சரியாக உள்ளதை தெரியப்படுத்த கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வங்கி புத்தகம், விவசாய அடையாள அட்டை, மத்திய, மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒன்றின் நகலை சரிபார்ப்பு அலுவலரிடம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார் ஆட்சியர் கந்தசாமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai