பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வியாழக்கிழமை நாட்டின்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வியாழக்கிழமை நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலையில்: திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை க.க.விஜயலட்சுமி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் சரவணன் தேசியக் கொடியேற்றினார். 
திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைவர் சி.வேலுச்சாமி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் எம்.பரசுராமன் தேசியக் கொடியேற்றினார். 
திருவண்ணாமலை எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தாளாளர் அரவிந்த்குமார் தலைமை வகித்தார். அருணை கல்விக் குழும நிர்வாகி எ.வ.வே.கம்பன் தேசியக் கொடியேற்றினார். 
விழாவில், திருவண்ணாமலை இந்தியன் வங்கி மேலாளர் எஸ்.சத்தியபாமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி அறக்கட்டளைத் தலைவர் சீனி.கார்த்திகேயன் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார். 
விழாவில், பள்ளித் தாளாளர் அருள்விழி கார்த்திகேயன், பள்ளி நிர்வாக இயக்குநர் என்.காயத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஏ.ஜி.அயூப்கான் தலைமை வகித்தார். தண்டராம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் அ.பிரவீன்குமார் தேசியக் கொடியேற்றினார்.
ஆரணி 
ஆரணி பகுதி பள்ளி, கல்லூரிகளில் வியாழக்கிழமை 73-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. 
ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கோ.சுகுமாறன் தேசியக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். 
நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் கா.கிருஷ்ணமூர்த்தி, பிற துறைத்  தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி: ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில்  பள்ளித் தாளாளர் கொடியேற்றினார். பள்ளி முதல்வர் ஜீனாபெட்ஸி வரவேற்றார். பள்ளி அறங்காவலர் வெங்கடேசன் நீரின் மேலாண்மை குறித்தும், மரம் நட்டு வளர்த்திட வேண்டியும் பேசினார். 
செங்கம்
செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் தலைவர் மனோகரன் தலைமையில் நிர்வாகக் குழு உறுப்பினர் அரங்கசாமி தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாசவி கிளப் கணேஷ்பாபு கொடியேற்றினார். பள்ளிச் செயலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவராமன் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சடையன் கொடியேற்றினார். 
முன்னூர்மங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பழநி தலைமையில் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவர் வெள்ளச்சிசுந்தரம் கொடியேற்றினார்.
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் கர்ணன், சிராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். அந்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாரதி தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மனோகரன் தேசியக் கொடியேற்றினார்.
முறையாறு நிவேதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிர்வாகக் குழு உறுப்பினர் சபரிசங்கர் கொடியேற்றினார்.
 பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் கவியரசன் தலைமையில் அரிமா சங்கத் தலைவர் ராஜேந்திரன் கொடியேற்றினார். 
வந்தவாசி
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அந்த கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தேசியக் கொடியேற்றினார். 
கல்லூரி முதல்வர் எஸ்.மைதிலி, செயலர் எம்.ரமணன், கல்வியியல் கல்லூரி முதல்வர் எம்.நிமாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  வந்தவாசியை அடுத்த தெள்ளாரு சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நிர்வாக இயக்குநர் டி.கே.பி.மணி தேசியக் கொடியேற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com