Enable Javscript for better performance
சாரண, சாரணீய ஆசிரியர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் கல்வி மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சாரண, சாரணீய ஆசிரியர்களுக்கு செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
    பயிற்சி தொடக்க விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் ராணி வரவேற்றார். இதில், செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் கலந்துகொண்டு பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசினார். 
    மாவட்ட பயிற்சி ஆணையர்கள் பாலகுமார், கோமதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
    செங்கம் கல்வி மாவட்ட சாரணர் இயக்கத் தலைவர் மணி, செயலர் வெங்கடேஷ், பொருளாளர் வேலாயுதம், திருவண்ணாமலை மாவட்டப் பயிற்சி ஆணையர் சீனிவாசவரதன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai