Enable Javscript for better performance
மின் நுகர்வோர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தண்டராம்பட்டில் மின் நுகர்வோர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக்சன் குரூப் இணைந்து நடத்திய முகாமுக்கு, சினம் தொண்டு நிறுவன இயக்குநர் இராம.பெருமாள் தலைமை வகித்து, சினம் தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் மின் நுகர்வோர் சேவை மையத்தின் கோட்பாடுகள், சேவைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கினார்.
    சென்னை சிட்டிசன் சிவிக் ஆக்சன் குரூப் ஆராய்ச்சியாளர் பரத்ராம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மின்சாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது, மின்வாரிய நுகர்வோர்களுக்கு உரிய நேரத்தில் மின் இணைப்பு வழங்குதல், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது, மின்சாதனப் பொருள்களை எப்படி வாங்குவது என்பன குறித்து விளக்கினார்.
    சோலார் விரிவுரையாளர் சுதாகர் பேசுகையில், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்து வீடு, தொழில்சாலை, விவசாயத்துக்குப் பயன்படுத்துவது குறித்து விளக்கினார். மேலும், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்ய மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியம், தனியாக மின் உற்பத்தி செய்து மின் வாரியத்துடன் ஒருங்கிணைந்து பயன்படுத்துவது குறித்து விளக்கினார்.
    பயிற்சியில் சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக்சன் குரூப் ஆலோசகர் ஆனந்தன், ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் மற்றும் வேலு, தமிழ்மணி உள்பட 100-க்கும் மேற்பட்ட மின் சாதனப் பணியாளர்கள், மின் உபயோகிப்பாளர்கள், விவசாயிகள், ஐடிஐ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai