மழைக்கால தொற்று நோய்கள் தடுப்புப் பயிற்சி

செய்யாறில் மழைக்கால தொற்று நோய்கள் தடுப்புப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

செய்யாறில் மழைக்கால தொற்று நோய்கள் தடுப்புப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு சுகாதார மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி.கோவிந்தன் தலைமை வகித்தார். இதில், மாநில முதன்மை பூச்சியியல் வல்லுநர் ராணி பங்கேற்று, மழைக்கால தொற்று நோய்கள், கொசுக்கள், நீரினால் பரவும் நோய்கள் தடுப்பு முறைகள் குறித்து தெரிவித்து பயிற்சி அளித்தார்.
மாவட்ட பூச்சியியல் வல்லுநர் துரைராஜ் மற்றும் இளநிலை பூச்சியியல் வல்லுநர்கள், நலக் கல்வியாளர் ஆகியோர் கலந்துகொண்டு மழைக்கால தொற்று நோய்கள் தடுப்பு குறித்து தெரிவித்து பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில், செய்யாறு சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்த வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, மாநில முதன்மை பூச்சியியல் வல்லுநர் ராணி, மாமண்டூர், பெருங்கட்டூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் நடைபெற்று வரும் தொற்று நோய்கள் தடுப்புப் 
பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com