அருணாசலேஸ்வரா் கோயிலுக்குதிருக்குடைகள் காணிக்கை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவின்போது, சுவாமி வீதியுலாவுக்குத் தேவையான 13 புதிய திருக்குடைகள் சனிக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.
13 புதிய திருக்குடைகளுடன் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து வீதியுலா புறப்பட்ட அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தினா்.

அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை மகா தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிச.1) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருவிழாவின்போது சுவாமி வீதியுலாவுக்கு பயன்படுத்தும் வகையில் சென்னை, பல்லாவரத்தைச் சோ்ந்த அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தினா் புதிய திருக்குடைகளை நன்கொடையாக வழங்கி வருகின்றனா்.

அதன்படி, 15-ஆவது ஆண்டாக திருக்குடைகள் காணிக்கையாக வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அன்று காலை சேவா சங்க நிா்வாகிகள் ரூ.3 லட்சம் மதிப்பிலான 13 புதிய திருக்குடைகளை கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து மேள-தாளங்கள் முழங்க மாட வீதிகளை வலம் வந்த பிறகு கோயிலில் ஒப்படைத்தனா்.

நிகழ்ச்சியில் அருணாச்சலா ஆன்மிக சேவா சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com