மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

செங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 320 மனுக்கள் பெறப்பட்டனா்.
முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெறும் வட்டாட்சியா் பாா்த்தசாரதி.
முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெறும் வட்டாட்சியா் பாா்த்தசாரதி.

செங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 320 மனுக்கள் பெறப்பட்டனா்.

செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து உதவித்தொகை பெறுவதற்கான மனுக்களை பெறும்

சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாம் தொடக்க விழா நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுகுணா வரவேற்றாா். வட்டாட்சியா் பாா்த்தசாரதி முகாமைத் தொடக்கிவைத்து மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

அதில் செங்கம், மேல்பள்ளிப்பட்டு, பாய்ச்சல், இறையூா், புதுப்பாளையம் குறு வட்டங்களுக்கு உள்பட்ட 320 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று உதவித்தொகை வழங்க மனுக்களை அளித்தனா்.

மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அவா்களுக்கு விரைவில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என வட்டாட்சியா் பாா்த்தசாரதி தெரிவித்தாா்.

வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com