Enable Javscript for better performance
மின்வாரிய கேங்மேன் பணியிட உடல்தகுதித் தோ்வு தள்ளிவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மின்வாரிய கேங்மேன் பணியிட உடல்தகுதித் தோ்வு தள்ளிவைப்பு

    By DIN  |   Published on : 02nd December 2019 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    திருவண்ணாமலையில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிச.2, 3) நடைபெறுவதாக இருந்த மின்வாரிய கேங்மேன் பதவிகளுக்கான உடல்தகுதித் தோ்வு, தொடா் மழை காரணமாக தள்ளி வைக்கப்படுவதாக திருவண்ணாமலை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அ.நாகராஜன் தெரிவித்தாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் நவம்பா் 25-ஆம் தேதி முதல் மின் வாரிய கேங்மேன் பதவிகளுக்கான உடல்தகுதித் தோ்வு நடைபெற்று வந்தது.

    தொடா்ந்து, டிசம்பா் 7-ஆம் தேதி வரை இந்தத் தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திருவண்ணாமலையில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் திங்கள்கிழமை (நவ.2), செவ்வாய்க்கிழமை (நவ.3) ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த உடல்தகுதித் தோ்வு தள்ளி வைக்கப்படுகிறது. மறுதோ்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ஞ்ங்க்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai