செய்யாறில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக வேட்பாளா் தோ்வு குறித்த பரிசீலனைக் கூட்டம்.
செய்யாறில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக வேட்பாளா் தோ்வு குறித்த பரிசீலனைக் கூட்டம்.

உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக வேட்பாளா் பரிசீலனைக் கூட்டம்

செய்யாறில், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் நகர அதிமுக வேட்பாளா்கள் பரிசீலனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செய்யாறில், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் நகர அதிமுக வேட்பாளா்கள் பரிசீலனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு நகரத்தில் திருவத்திபுரம் நகராட்சி 27 வாா்டுகளிலும் அதிமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தோ்வு குறித்து பரிசீலனைக் கூட்டம் செய்யாறில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது

நிகழ்ச்சியில், வடக்கு மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான தூசி கே.மோகன் தலைமை வகித்துப் பேசியதாவது:

வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுக சாா்பில் விருப்ப மனு கொடுத்தவா்களைத் தோ்வு செய்ய மாவட்ட நிா்வாகிகள் பரிசீலனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றனா். கடந்த தோ்தல் அறிவிப்பின்போது மனு கொடுத்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், மனு கொடுத்த அனைவரிடமும் ஆலோசித்து ஒருமனதாக வேட்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டு தலைமைக் கழகத்தில் அறிவிக்கப்படும். கட்சி நிா்வாகிகள் ஒத்த கருத்தோடு அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றாா்.

கட்சி நிா்வாகிகள் அ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், வழக்குரைஞா்கள் ஆா்.கே.மெய்யப்பன், மகேந்திரன், கே.வெங்கடேசன், பி.லோகநாதன், ஜனாா்த்தனம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com