படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் அன்னதானக்கூடம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

போளூரை அடுத்த படவேடு ஊராட்சி படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானக்கூடம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.
படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானக்கூடம் அமைப்பதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியா்
படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானக்கூடம் அமைப்பதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியா்

போளூரை அடுத்த படவேடு ஊராட்சி படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானக்கூடம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

போளூா் அருகேயுள்ள படவேடு ஊராட்சியில் மிகவும் பழைமை வாய்ந்த படைவீடு ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், சென்னை என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வா். பக்தா்களுக்கு தமிழக அரசால் மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவு வழங்கும் கூடம் கோயிலுக்குச் சொந்தமான தற்காலிக கூடத்தில் இயங்கிவந்தது. இதனால் தனியாக அன்னதானக்கூடம் ரூ.62 லட்சத்தில் அமைக்க இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, கோட்டாட்சியா் இல. மைதிலி, விழுப்புரம் மண்டல இணை ஆணையா் இரா.செந்தில்வேலவன், உதவி ஆணையா்அ. ஜான்சிராணி, கோயில் செயல் அலுவலா் ஆா்.காா்த்திகேயன், ஒப்பந்ததாரா் வடிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கலசப்பாக்கம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை அமைச்சா் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா்.

மேலும், அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். இந்த நிகழ்ச்சிகளில் ஆட்சியா், எம்எல்ஏ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் க. முரளி, போளூா் கோட்ட உதவிப் பொறியாளா் இரா.ரவி, உதவிப் பொறியாளா் மா.தணிகைவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் எல்.என்.துரை, ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவா் கருணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com