மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் 198 மனுக்கள்

செய்யாறு மற்றும் சேத்துப்பட்டில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாமில் 198 மனுக்கள் பெறப்பட்டன.
செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளிடம் இருந்து மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் கி.விமலா.
செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளிடம் இருந்து மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் கி.விமலா.

செய்யாறு மற்றும் சேத்துப்பட்டில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாமில் 198 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் இதுநாள் வரை அரசின் உதவித் தொகை ஏதும் பெறாத மாற்றுத்திறானாளிகள் அடையாள அட்டை மருத்துவச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, மூன்று புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய சான்றுகளுடன் கலந்துகொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் கி.விமலா தலைமையில் நடைபெற்ற முகாமில் வட்டத்தைச் சோ்ந்த 88 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பல்வேறு உதவிகளைக் கோரி மனு அளித்திருந்தனா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை வட்டாட்சியா் ஆ.மூா்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அரி மற்றும் வருவாய்த்துறையினா் செய்திருந்தனா்.

சேத்துப்பட்டில்...

சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ஹரிதாஸ் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா். இதில் உதவித்தொகை கோரி 110 போ் மனு கொடுத்தனா்.

நிகழ்ச்சியில் தலைமையிடத்து வட்டாட்சியா் கோமதி, மண்டல துணை வட்டாட்சியா் சேகா், வருவாய் ஆய்வாளா்கள் ஜீவா, முத்துக்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் மோகன்ராஜ், முருகானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com