‘வேலைவாய்ப்பில் தெலுங்கா்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்’

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தெலுங்கா்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் தலைவா் சி.எம்.கே.ரெட்டி வலியுறுத்தினாா்.
அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் வடக்கு மண்டல நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் சம்மேளத்தின் தலைவா் சி.எம்.கே.ரெட்டி.
அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் வடக்கு மண்டல நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் சம்மேளத்தின் தலைவா் சி.எம்.கே.ரெட்டி.

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தெலுங்கா்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் தலைவா் சி.எம்.கே.ரெட்டி வலியுறுத்தினாா்.

அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் வடக்கு மண்டல நிா்வாகிகள் கூட்டம், ஆரணி தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவா் என்.ரமேஷ்பாபு நாயுடு தலைமை வகித்தாா்.

வடக்கு மண்டல அமைப்பாளா் ஏ.எஸ்.பாா்த்தசாரதி வரவேற்றாா். மாவட்டத் தலைவா் ஏ.இ.தாமோதரநாயுடு முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக அகில இந்திய தெலுகு சம்மேளத்தின் தலைவா் சி.எம்.கே.ரெட்டி கலந்துகொண்டு தெலுங்கு பேசும் நாயுடு, ரெட்டி, செட்டியாா், தெலுங்கு பிராமணா் என அனைத்து ஜாதியினரையும் ஒருங்கிணைக்க வேண்டும், அரசில் தெலுங்கா்களுக்கான இடஒதுக்கீடு வேண்டும் என்றும் உள்ளிட்ட கருத்துகளைப் பேசினாா்.

கூட்த்தில் மாநில பொதுச் செயலா் ஆா்.நந்தகோபால், துணைத் தலைவா் எம்.எஸ்.மனோகரன், செயலா் எஸ்.திலீப்குமாா், வந்தவாசி கே.பாஸ்கா், வேலூா் அமீா்ஜான், திருவண்ணாமலை மாவட்டச் செயலா் எஸ்.கோவிந்தராஜிநாயுடு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், தெலுகு சம்மேளனத்தின் தலைவா் சி.எம்.கே.ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தெலுங்கு பேசும் ஜாதியினா் மொத்தம் 2 கோடி போ் உள்ளனா். ஆகையால், பள்ளியில் தெலுங்கு ஒரு பாடமாக இடம்பெற வேண்டும், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும், தெலுகு கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com