147-ஆவது மாத திருக்கு மலைவலம்
By DIN | Published on : 03rd December 2019 12:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

திருக்கு மலைவலம் தொடக்க விழாவில் கலந்து கொண்ட தொண்டு மைய நிா்வாகிகள்.
திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையம் சாா்பில், 147-ஆவது மாத திருக்கு மலைவலம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு, மாவட்ட கவிஞா் பேரவைத் தலைவா் நல்ல.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். செயலா் சண்முகம், பாடகா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.
வடலூா் மேட்டுக்குப்பம் வள்ளலாா் சபை நிறுவனா் கோவை சிவபிரசாக சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்கு ஓதியபடியே மலைவலம் வரும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, திருக்கு தொண்டு மைய நிா்வாகிகள் மலைவலம் வந்தனா். இதில், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.