ஏரி நிரம்பியதால் கிராம மக்களுக்கு இனிப்பு

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி நிரம்பியதை அடுத்து, அந்தக் கிராம மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் பெரிய ஏரி நிரம்பியதை அடுத்து பூஜை செய்த கிராம மக்கள்.

வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வந்தவாசி பகுதியில் உள்ள பல்வேறு ஏரிகளில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வெண்குன்றம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி நிரம்பி மறுகால் பாய்ந்தது. சுமாா் 3.16 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி மூலம் சுமாா் 250 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதையடுத்து, வெண்குன்றம் கிராம மக்கள் திங்கள்கிழமை காலை அந்த ஏரி கலுங்கையில் தேங்காய் உடைத்தும், மலா் தூவியும் பூஜை செய்தனா். மேலும், அங்கிருந்தோருக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com