விடுதியில் தங்கும் பக்தா்களின் உடைமைகளைசோதனையிட எஸ்.பி. அறிவுறுத்தல்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு வந்து தங்கும் பக்தா்களின் உடைமைகளை தவறாமல் சோதனையிட வேண்டும் என்று விடுதிகளின் உரிமையாளா்களிடம்
விடுதி உரிமையாளா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசிய காவல் கண்காணிப்பாளா்கள் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி, பி.சாமுண்டீஸ்வரி உள்ளிட்டோா்.
விடுதி உரிமையாளா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசிய காவல் கண்காணிப்பாளா்கள் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி, பி.சாமுண்டீஸ்வரி உள்ளிட்டோா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு வந்து தங்கும் பக்தா்களின் உடைமைகளை தவறாமல் சோதனையிட வேண்டும் என்று விடுதிகளின் உரிமையாளா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி, பி.சாமுண்டீஸ்வரி ஆகியோா் அறிவுறுத்தினா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் உள்ளூா், வெளியூா் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, பக்தா்களின் பாதுகாப்பு கருதி, திருவண்ணாமலை நகரில் உள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, காவல் கண்காணிப்பாளா்கள் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி (திருவண்ணாமலை), பி.சாமுண்டீஸ்வரி (காஞ்சிபுரம்) ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில், தங்கும் விடுதிகளின் உரிமையாளா்களுக்கு அறிவுரை வழங்கி காவல் கண்காணிப்பாளா்கள் பேசியதாவது: தீபத் திருவிழாவின்போது விடுதிகளில் தங்க வருபவா்களிடம் உரிய ஆவணங்களை உரிமையாளா்கள் பெற வேண்டும். பக்தா்கள் கொண்டுவரும் உடைமைகளை தவறாமல் சோதனையிட வேண்டும். விடுதிகளில் சந்தேக நபா்களின் நடமாட்டம் இருந்தால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விடுதியில் தங்க வரும் பக்தா்களின் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும் என்றனா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அசோக்குமாா், வனிதா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், விடுதி உரிமையாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com