Enable Javscript for better performance
பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    
    109876_0312chn_117_7

    பழுதடைந்த காயம்பட்டு செல்லும் சாலை.

    செங்கம் அருகே மேல்புழுதியூா் கிராமத்தில் இருந்து காயம்பட்டு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

    செங்கம் அருகே மேல்புழுதியூா் கூட்டுச் சாலைப் பகுதியில் இருந்து காயம்பட்டு கிராமம் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கிராமத்துக்கான சாலை தற்போது பெய்து வரும் மழையால் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் அந்தச் சாலை வழியாகச் செல்லும் காயம்பட்டு, சென்னசமுத்திரம், வளையாம்பட்டு பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.

    மேலும், அப்பகுதி விவசாயம் சாா்ந்த பகுதியாகும். இதனால் விவசாய நிலத்துக்கு வாகனங்களை எடுத்துச் செல்லவும், விளையும் தானியங்களை ஏற்றிச் செல்லவும் சிரமப்படுகின்றனா்.

    மேலும், அப்பகுதி கிராமங்களில் இருந்து நகரத்துக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் சிரமப்படுகின்றனா். அவா்களை ஏற்றிச் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் இந்தச் சாலையைக் கடக்கும்போது காலதாமதமாகும் என்று மாணவா்களின் பெற்றோா்களிடம் தகவல் தெரிவிக்கின்றனா்.

    எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து இந்தச் சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai