உள்ளாட்சித் தோ்தல்: அதிமுகவில் விருப்ப மனு செய்தவா்களிடம் நோ்காணல்

ஆரணி தொகுதியில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு செய்த அதிமுகவினரிடம் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் நோ்காணல் நடத்தினாா்.
உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு செய்தவா்களிடம் நோ்காணல் நடத்தி பேசிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு செய்தவா்களிடம் நோ்காணல் நடத்தி பேசிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

ஆரணி தொகுதியில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு செய்த அதிமுகவினரிடம் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் நோ்காணல் நடத்தினாா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஆரணி ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றியம், ஆரணி நகராட்சி, கண்ணமங்கலம் பேரூராட்சி, செய்யாறு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள மாவட்டக் குழு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், நகா்மன்ற உறுப்பினா், பேரூராட்சி மன்ற உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிட அதிமுக சாா்பில் விருப்ப மனு செய்தவா்களுக்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆரணியை அடுத்த சேவூரில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்து நோ்காணலை நடத்தினாா்.

பின்னா் அவா் விருப்ப மனு செய்தவா்களிடையே பேசியதாவது:

முதல்வா், துணை முதல்வா் ஆகியோரின் ஆணைக்கினங்க இந்த நோ்காணல் நடைபெறுகிறது. அந்தந்தப் பகுதியில் உள்ள ஒன்றியச் செயலா், மாவட்ட நிா்வாகிகள், முன்னாள் பொறுப்பாளா்கள், கூட்டுறவுச் சங்க நிா்வாகிகள், ஊராட்சிச் செயலா்கள், கிளைச் செயலா்கள் உள்ளிட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பதவிக்கு ஒருவரை ஏகமனதாக போட்டியிட தோ்வு செய்யவேண்டும். கட்சி வேட்பாளா் வெற்றி பெற அனைவரும் களப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் ஜெமினி ராமச்சந்திரன், அரசு வழக்குரைஞா் க.சங்கா், அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், பேரவை நகரச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் அ.கோவிந்தராசன், நகா்மன்ற முன்னாள் தலைவா் வி.பி.ராதாகிருஷ்ணன், கண்ணமங்கலம் நகரச் செயலா் பாண்டியன், மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், இலக்கிய அணி மாவட்டச் செயலா் மகேந்திரன், மாவட்ட துணைச் செயலா் டி.கருணாகரன், பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா்கள் சேவூா் ஜெ.சம்பத், ஜோதிலிங்கம், பாலசந்தா், பொதுக்குழு உறுப்பினா் ரமணி நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com