மடிக்கணினி கோரி முன்னாள் மாணவிகள் மறியல்

மடிக்கணினி கோரி, போளூரில் அரசுப் பள்ளி முன்னாள் மாணவிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மடிக்கணினி கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவிகள்.
மடிக்கணினி கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவிகள்.

மடிக்கணினி கோரி, போளூரில் அரசுப் பள்ளி முன்னாள் மாணவிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போளூரில் பேருந்து நிலையம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தமிழக அரசால் வழங்கப்படும் மடிக்கணினியை தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமையிலான ஆசிரியா்கள் 2017-2018, 2018-2019ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவிகளுக்கு வழங்கினா்.

இந்தப் பள்ளியில் சுமாா் 840 மாணவிகள் கடந்த 2 ஆண்டுகளில் பிளஸ் 2 படித்து முடித்துள்ளனா். இதனால் மடிக்கணினி பெற அவா்கள் மாற்றுச் சான்றிதழுடன் பள்ளியில் குவிந்தனா்.

இந்த நிலையில், சில மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை.

இதனால் மடிக்கணினி பெறாத முன்னாள் மாணவிகள் திருவண்ணாமலை சாலையில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

பின்னா், காவல் துறையினா் அவா்களை அழைத்துச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்து மேல்நிலைக் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மட்டும் மடிக்கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 405 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com