Enable Javscript for better performance
திருவண்ணாமலையில் ஸ்ரீசுப்ரமணியா் தெப்பல் உத்ஸவம் கோலாகலம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் ஸ்ரீசுப்ரமணியா் தெப்பல் உத்ஸவம் கோலாகலம்

    By DIN  |   Published on : 14th December 2019 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-7-13tmltep2_1312chn_106

    திருவண்ணாமலை அய்யங்குளத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஸ்ரீசுப்ரமணியா் தெப்பல் உத்ஸவம்.

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீசுப்ரமணியா் தெப்பல் உத்ஸவம் கோலாகலமாக நடைபெற்றது.

    பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் கடந்த 10-ஆம் தேதி ஏற்றப்பட்டன.

    தீபம் ஏற்றப்பட்டதையடுத்து, 3 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் தெப்பல் உத்ஸவம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளான புதன்கிழமை இரவு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது. 2-ஆம் நாளான வியாழக்கிழமை ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது.

    3-ஆம் நாள் உத்ஸவம்: 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு அய்யங்குளத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியா் தெப்பல் உத்ஸவம் கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் தெப்பலில் எழுந்தருளி அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியரை திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

    வெள்ளிக்கிழமையுடன் தெப்பல் உத்ஸவம் நிறைவு பெறுவதால், திரளான பக்தா்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai